InMyLanguage.Org will be taken offline on March 24, 2017. Until that time, you can download and save the documents that you would like to keep. After that date, please see Settlement.Org’s for translated information.

InMyLanguage.Org / Dans Ma Langue sera mis hors ligne le 24 mars 2017. Jusqu'à cette date, vous pourrez télécharger et sauvegarder les documents que vous souhaitez conserver. Suite à cette date, des documents du site figureront sur Etablissement.Org.

அன்றாட வாழ்க்கை

ஒன்ராறியோவில் வசிப்பது பற்றி நீங்கள் அறிந்து பரிச்சயம் அடைவதற்கு இந்தப் பிரிவு உதவும் என்பதுடன், இங்கு வந்து சேரும் பொழுது எதனை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பது பற்றியும் ஓரளவு தகவலினை உங்களுக்கு இது வழங்கும்.

திருமணம்

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

வெளிநாட்டில் நடைபெற்ற எனது திருமணத்தை கனடா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா?

உங்கள் திருமணம் கனடாவுக்கு வெளியே நடைபெற்றிருந்தால், பின்வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் Citizenship and Immigration Canada (CIC) (1) அதனை ஏற்றுக்கொள்ளும்:

  • நடைபெற்ற இடத்தின் சட்டத்தின் படி அது சட்டரீதியானதாக இருந்தால்
  • திருமணம்தொடர்பான (Canada’s federal laws)கனடா பெடரல் சட்டத்துக்கு அது உடன்பட்டதாக இருந்தால்
  • திருமணம்தொடர்பான (Canada’s federal laws)கனடா பெடரல் சட்டத்தின்கீழ்:
  • நெருங்கிய உறவினர்கள் ( உதாரணமாக, பாட்டன் பாட்டி-பேரன் பேத்தி,பெற்றோர்- பிள்ளை, உடன் பிறந்த சகோதரர்- சகோதரிகள்) ஒருவரையொருவர் திருமணம் செய்ய முடியாது)
  • ஒரே தடவையில் ஒருவரை மாத்திரம் தான் திருமணம் செய்துகொள்ள முடியும்.

உங்கள் திருமணம் அது நடைபெற்ற இடத்தில் சட்டபூர்வமானதா என சந்தேகம் ஏற்பட்டால், அந்த இடத்தில் அது சட்ட பூர்வமானது என நிரூபிப்பது (your responsibility) உங்கள் பொறுப்பாகும். உங்கள் திருமணம் அது நடைபெற்ற இடத்தில் சட்டத்துக்கு முரணாக அமைந்தால், அல்லது அந்த இடத்தின் சட்டம் உங்கள் திருமணத்தை அனுமதிக்காவிட்டால்,(உதாரணமாக, உங்கள் உறவு (same-sex relationship) ஒரே பாலின உறவாக இருந்தால்,உங்கள் நாடு ஓரின திருமணத்தை அனுமதிக்காவிட்டால்) CIC உங்கள் உறவை திருமணமாக அங்கீகரிக்காது. இருந்தபோதிலும், (Citizenship and Immigration Canada) பிரஜா உரிமையும் கனடாவுக்கான குடிவரவும், உங்கள் உறவை (common-law) பொதுச் சட்டமாக அல்லது (sponsorship purposes), பொறுப்பேற்றல் நோக்கங்களுக்காக (conjugal relationship) திருமண வாழ்க்கை உறவாக அங்கீகரிக்கும்.

உங்கள் திருமணம் இத்தகைய விதிமுறைகளுக்கு உடன்பட்டதாக இருந்தால், உங்கள் துணையை நீங்கள் (sponsor)பொறுப்பேற்க விரும்பினால், அவரைப் பொறுப்பேற்க, விண்ணப்பம் செய்யும்போது உங்கள் துணை, ஆகக் குறைந்தது 16 வயதாக இருக்க வேண்டும்.

நீங்கள், உங்கள் (spouse)துணையை அல்லது (common-law partner) பொதுச் சட்டத்துக்கு உட்பட்ட துணைவரை (sponsor)பொறுப்பேற்பது தொடர்பான மேலதிக விபரங்களை CIC உடன் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இலவச தொலைபேசி இலக்கம்: (Toll-free): 1-888-242-2100

மேலதிக தகவலுக்கு:

(1) Citizenship and Immigration Canada:
http://findlink.at/spouse

(2) CIC Help Centre - A tool that helps answer frequently asked questions on immigration matters.
http://findlink.at/cic-help