அன்றாட வாழ்க்கை

ஒன்ராறியோவில் வசிப்பது பற்றி நீங்கள் அறிந்து பரிச்சயம் அடைவதற்கு இந்தப் பிரிவு உதவும் என்பதுடன், இங்கு வந்து சேரும் பொழுது எதனை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பது பற்றியும் ஓரளவு தகவலினை உங்களுக்கு இது வழங்கும்.

தனிப்பட்ட நிதிநிலை

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

கனேடிய கடன் பெற்ற சரித்திரம் இல்லாமல் எப்படி நான் ஒரு கடன் அட்டையைப் பெற முடியும்?

உங்களுக்கு ஏதாவது கனேடிய கடன் பெற்ற சரித்திரம் (Credit History) இல்லை என்றால் கனடாவில் பெரும்பாலான வங்கிகள் உங்களுக்கு ஒரு கடன் அட்டையைத் தரப்போவது இல்லை. உலகளாவிய முறையில் செயல்படும் விசா மற்றும் மாஸ்டர் கார்ட் கடன் அட்டை வியாபார நிறுவனங்களுடன் பல வருட கடன் பட்ட சரித்திரம் உங்களுக்கு இருந்த போதிலும் கனடாவில் நீங்கள் கேட்ட உடனே கடன் அட்டை உங்களுக்கு கிடைக்க முடியாது போகலாம் .

வங்கி முகாமையாளருடன் உரையாடி உங்கள் வெளிநாட்டு கடன் பெற்ற சரித்திரத்தை அவரது வங்கி அங்கீகரித்து உங்களுக்கு வழக்கமான (உறுதிசெய்யப்படாத /unsecured) கடன் அட்டை ஒன்று தரமுடியுமா என்று கேளுங்கள். கனடாவுக்கு வெளியே நீங்கள் பெற்ற கடன்வசதி பற்றிய தகவல் எதனையும் தவறாது எடுத்துச் செல்லுங்கள்.

கனடாவில் நீங்கள் கடன்வசதியைப் பெறுவதற்கும் ஒரு கடன் பெற்ற சரித்திரத்தை கட்டி எழுப்புவதற்கும் உள்ள சில வழிகள் கீழே தரப்பட்டு உள்ளன:

  • உறுதி செய்யப்பட்ட( secured) கடன் அட்டை ஒன்றைப் பெறுங்கள். இந்த வகையான அட்டையினைப் பெறுவதற்கு உறுதி முன்வைப்பு (security deposit) ஏற்பாடு ஒன்றை கடன் அட்டை நிறுவனத்துடன் நீங்கள் செய்ய வேண்டும். இது காசாகவோ, தளபாடமாகவோ அல்லது கடன் அட்டை நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் வேறு ஒன்றாகவோ இருக்கலாம்.
  • இணைந்த அட்டை(joint card) ஒன்றுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். நல்ல கடன்வசதி அங்கீகாரம் கொண்ட ஒரு நண்பர் அல்லது குடும்ப அங்கத்தவரைத் தெரிந்தெடுத்து, அவரது அட்டையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும்படி செய்யுங்கள். அட்டைக்கான கடன்களைத் தீர்ப்பதற்கு நீங்கள் இருவருமே பொறுப்பாக இருப்பீர்கள். இது உங்களுடைய கடன் பட்ட சரித்திரத்தை கட்டியெழுப்ப உதவுகிறது.
  • கூட்டுக் கையொப்பமிடுபவர் (co-signer) ஒருவரைத் தெரிந்தெடுங்கள். கூட்டுக் கையொப்பமிடுபவர் நீங்கள் கடன் அட்டை ஒன்றைப் பெறுவதற்கு உதவ முடியும். அது உங்கள் உபயோகத்துக்கு என்று இருக்கும். ஆனாலும் உங்கள் கொடுப்பனவுகளை நீங்கள் செலுத்த முடியாது போகுமாயின், கூட்டுக் கையொப்பமிடுபவர் உங்கள் கடன் அட்டைக்கான கட்டணங்களை செலுத்துவதற்குப் பொறுப்பாக இருப்பார்.
  • கடன் ஒன்றினை வங்கி ஒன்றிடம் அல்லது வேறு ஏதாவது கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றிடம் பெறுவதற்கு விண்ணப்பியுங்கள். பின்பு அக்கடனை வேகமாகத் திருப்பிச் செலுத்தி விடுங்கள்.
  • சில்லறை உபயோக கடன் அட்டை (retail credit card) ஒன்றினைப் பெற்றிடுங்கள். வாகன  எரிபொருள் விற்பனவு நிறுவனம் அல்லது பேரங்காடிக் கடை போன்று, வங்கி அல்லது நிதி நிறுவனம் தவிர்ந்த ஒரு இடத்தில் இருந்து கடன் அட்டையினைப் பெறுவதற்கு விண்ணப்பியுங்கள். இவ்வகை அட்டைகளை உபயோகித்து குறிப்பிட்ட கடைகளில் பொருட்களை வாங்கமுடியும். ஆனால் நீங்கள் கடனாகப் பணம் பெற முடியாது. வங்கிகளில் இருந்து பெறப்படும் அட்டைகளை விட இவ்வகை அட்டைகளுக்கு கூடிய வட்டி வீதம் இருக்கும். இதன் விளைவு என்னவெனில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் உங்கள் கடன் அட்டை நிலுவைப் பணத்தை பூரணமாகச் செலுத்தி முடிக்கத்தவறினால், மிகுதியாய் கொடுப்பதற்கு உள்ள பணத்தின் மீது வட்டியாக நிறையவே அறவிடப்படும். அத்துடன் கடன் அட்டை நிறுவனத்துக்கு மேலதிகமான ஒரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும்.
  • வேலைத் தளத்தில் அல்லது சமூகத்தில் இருக்கும் கடன்வசதி ஒன்றியம் (credit union) ஒன்றில் சேருங்கள்.

கடன் அட்டைகளை எடுப்பது மற்றும் உபயோகிப்பது பற்றி மேலதிக தகவல் பெற நீங்கள் விரும்பினால் கனடா நிதிசார்ந்த நுகர்வோர் முகவர் நிலையத்துடன் /Financial Consumer Agency of Canada (FCAC) (1) தொடர்பு கொள்ளுங்கள்:

கட்டணம் இல்லாமல்: 1-866-461-FCAC (3222)

மேலதிக தகவலுக்கு:

(1) Financial Consumer Agency of Canada (FCAC):
http://findlink.at/fcac-acfc