அன்றாட வாழ்க்கை

ஒன்ராறியோவில் வசிப்பது பற்றி நீங்கள் அறிந்து பரிச்சயம் அடைவதற்கு இந்தப் பிரிவு உதவும் என்பதுடன், இங்கு வந்து சேரும் பொழுது எதனை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பது பற்றியும் ஓரளவு தகவலினை உங்களுக்கு இது வழங்கும்.

தனிப்பட்ட நிதிநிலை

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

எனது கடன் பெற்ற சரித்திரம் மற்றும் புள்ளிநிலை ஆகியவற்றை எப்படி நான் சரிபார்க்க முடியும்?

இக்கட்டுரையில் கனடா நிதிசார்ந்த நுகர்வோர் முகவர் நிலையத்திடம்/ Financial Consumer Agency of Canada (1) இருந்து பெறப்பட்ட தகவல் அடங்கி உள்ளது.

உங்களுடைய கடன் அறிக்கையை (credit report) ஒரு கடன் அறிவிக்கும் முகவர் நிலையத்திடம் இருந்து வேண்டிப் பெற்றுக் கொள்ளுவதன் மூலம் நீங்கள் உங்கள் கடன் பெற்ற சரித்திரம்(credit history) மற்றும் கடன் புள்ளி நிலை (credit score) ஆகியவற்றைச் சரிபார்க்க முடியும். கனடாவில் 2 பிரதானமான கடன் அறிவிக்கும் முகவர் நிலையங்கள் உள்ளன. அவை: ஈக்குவிபாக்ஸ் கனடா / Equifax Canada (2) மற்றும் திரான்ஸ்யூனியன் கனடா / TransUnion Canada (3).

 உங்களுடைய கடன் அறிக்கையை நீங்கள் பெறுவதற்குரிய வேண்டுகோளினை தபால், தொலைபேசி, நேரில் செல்லுதல் அல்லது கணினி வழி போன்ற முறைகளால் செய்யலாம். மிக இலகுவானதும் மிகப் பாதுகாப்பானதும் ஆன முறைகள் தபால் மூலம் செய்யும் அல்லது கணினி வழியான முறைகள் ஆகும். அநேகமான சந்தர்ப்பங்களில் உங்களது கடன் அறிக்கையைப் பெற்றுக் கொள்வது இலவசமானதாகும். நீங்கள் கணினி வழியாக வேண்டுகோள் விடுக்கும் போது உங்களிடமிருந்து ஒரு கட்டணம் அறவிடப்படும். 

தபால்மூலம் பெறுதல்

சம்பந்தப்பட்ட கடன் அறிவிக்கும் முகவர் நிலையத்துக்கு நீங்கள் ஒரு விண்ணப்பப் படிவத்தினை தபால் மூலம் அனுப்பி விடலாம். முகவர் நிலையத்தின் இணையத்தளத்துக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்து, அச்சிட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள். அத்துடன் 2 அடையாள ஆவணங்களின் பிரதிகளையும் (2 pieces of identification) சேர்த்து உறையினுள் இட்டு அனுப்புங்கள். உதாரணம்: வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம், வீட்டு உபயோகப் பொருள் பற்றுச்சீட்டு, அல்லது வங்கிக் கணக்குக் கூற்று. இவ்விரு ஆவணங்களையும் சேர்த்துப் பார்க்கையில் அவற்றில் உங்கள் பெயர், இப்போதுள்ள முகவரி, பிறந்த திகதி மற்றும் கையொப்பம் ஆகியன கட்டாயமாக அடங்கி இருத்தல் வேண்டும். இதன் பின்னர், ஏறத்தாழ 2 வாரங்களில் தபால் முலம் ஓர் அறிக்கையினை நீங்கள் பெறுவீர்கள் .

தொலைபேசி மூலம் பெறுதல்

தொலைபேசியில் பின்வரும் இலக்கங்களை அழைத்து அதில் கூறப்படும் அறிவுறுத்தல்களின்படி செய்யுங்கள். உங்களுடைய சமூகக் காப்புறுதி இலக்கத்தினை (SIN) அல்லது கடன்வசதி அட்டை (credit card) இலக்கத்தினை கொடுக்கும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் அறிக்கை ஒன்றினை ஏறத்தாழ 2 வாரங்களில் தபால் மூலம் பெறுவீர்கள்.

ஈக்குவிபாக்ஸ் கனடா / Equifax Canada:

கட்டணம் இல்லாமல்: 1-800-465 7166

திரான்ஸ்யூனியன் கனடா / TransUnion Canada:

கட்டணம் இல்லாமல்: 1-800-663-9980

நேரில் சென்று பெறுதல்

திரான்ஸ்யூனியன் முகவர் நிலையம், கடன் அறிக்கை ஒன்றிற்காக நேரில் சென்று விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க உங்களை அனுமதிக்கும். ஒன்ராறியோவில் இதற்கு 1 காரியாலயம் மட்டுமே உள்ளது:

TransUnion Canada / திரான்ஸ்யூனியன் கனடா

Customer Relations / நுகர்வோர் தொடர்புகள்

709 Main Street West

Hamilton, ON

L8S 1A2

நீங்கள் அவர்களின் காரியாலயத்துக்குச் செல்லும்பொழுது அங்கு விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் சேர்த்து 2 அடையாள ஆவணங்களையும் கொண்டு செல்லுங்கள். உதாரணம்: வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம். வீட்டு உபயோகப் பொருள் பற்றுச்சீட்டு, அல்லது வங்கிக் கணக்குக் கூற்று. இவ்விரு ஆவணங்களையும் சேர்த்துப் பார்க்கையில் அவற்றில் உங்கள் பெயர், இப்போதுள்ள முகவரி, பிறந்த திகதி மற்றும் கையொப்பம் ஆகியன கட்டாயமாக அடங்கி இருத்தல் வேண்டும். நீங்கள் உங்களது அறிக்கையை 10 – 15 நிமிடம் அளவிலான நேரத்தில் பெறுவீர்கள்.

இணையம் வழியாகப் பெறுதல்

இம்முறையே வேகத்தில் மிகக் கூடியதாக உள்ளது. ஏனெனில் நீங்கள் உங்களின் கடன் அறிக்கையை கணினி மூலம் சில நிமிடங்களில் பெற்றுக் கொள்வீர்கள். ஆயினும் இதற்கு நீங்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மேலதிக தகவல் பெறுவதற்கு கடன் அறிவிக்கும் முகவர் நிலையத்தின் இணையத்தளத்துக்குச் சென்று பாருங்கள்.

எனது கடன் அறிக்கையில் ஒரு தவறு இருக்குமாயின் நான் என்ன செய்ய வேண்டும்?

கடன் அறிவிக்கும் முகவர் நிலையத்துடனும் சம்பந்தப்பட்ட உங்கள் நிதிசார்ந்த நிறுவனத்துடனும் உடனடியாகத் தொடர்பு கொள்ளுங்கள். மேலதிக தகவல் மற்றும் உதவியினைப் பெறுவதற்கு நீங்கள் கனடா நிதிசார்ந்த நுகர்வோர் முகவர் நிலையத்துடனும் / Financial Consumer Agency of Canada (FCAC) தொடர்பு கொள்ள முடியும்:

கட்டணம் இல்லாமல்: 1-866-461-FCAC (3222)

மேலதிக தகவலுக்கு:

(1) கனடா நிதிசார்ந்த நுகர்வோர் முகவர் நிலையம் / Financial Consumer Agency of Canada (FCAC):
http://findlink.at/fcac-acfc

(2) ஈக்குவிபாக்ஸ் கனடா  / Equifax Canada:
http://findlink.at/equifax

(3) திரான்ஸ்யூனியன் கனடா / TransUnion Canada:
http://findlink.at/transunion