InMyLanguage.Org will be taken offline on March 24, 2017. Until that time, you can download and save the documents that you would like to keep. After that date, please see Settlement.Org’s for translated information.

InMyLanguage.Org / Dans Ma Langue sera mis hors ligne le 24 mars 2017. Jusqu'à cette date, vous pourrez télécharger et sauvegarder les documents que vous souhaitez conserver. Suite à cette date, des documents du site figureront sur Etablissement.Org.

ஆரோக்கியம்

ஒன்ராறியோவில் உள்ள ஆரோக்கிய சேவைகள், ஆரோக்கிய காப்புறுதி ஆகியன பற்றியும் ஒரு மருத்துவரையும் பிற ஆரோக்கிய பராமரிப்பு நிபுணத்துவப் பணியாளர்களையும் கண்டறிவது எவ்வாறு என்பது பற்றியும் தகவலினை இங்கு காணுங்கள்.

உங்களிடம் ஓஹிப் இல்லாவிட்டால்

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

வைத்தியரின் மருந்துச்சீட்டு மருந்துகளுக்கு நான் எவ்வாறு பணம் கொடுக்க முடியும்?

வைத்தியரின் மருந்துச்சீட்டு மருந்துகளுக்கான பணத்தை ஒன்ராறியோ ஆரோக்கிய காப்புறுதித் திட்டம் (Ontario Health Insurance Plan - OHIP) வழங்குவதில்லை. நீங்கள் மருந்துச் சீட்டு மருந்துகளுக்குப் பணம் செலுத்த உதவும் செயல்திட்டங்கள் ஆரோக்கியம் மற்றும் நீண்டகாலப் பராமரிப்புக்கான ஒன்ராறியோ அமைச்சிடம் இருக்கின்றன. இந்த வகைச் செலவுகளுக்குப் பணம் கொடுப்பதற்கு பணிவழங்குவோர் சிலர் முன்வைக்கும் தனியார் காப்புறுதி மற்றும் திட்டங்களும் உதவமுடியும். இக்காப்புறுதி உங்கள் கணவர் அல்லது மனைவி மற்றும் உங்கள் பிள்ளைகளையும் காக்கிறது.

நீங்கள் தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து தனியார் காப்புறுதியையும் வாங்குவதற்கு முடியும். இவ்வாறான திட்டங்களும் பெரும்பாலும் மருந்துச் சீட்டு மூலமான மருந்துகளுக்கு பணம் கொடுக்கின்றன.

ஆரோக்கியம் மற்றும் நீண்டகாலப் பராமரிப்புக்கான ஒன்ராறியோ அமைச்சு பின்வரும் செயல்திட்டங்களின் வழியாக மருந்துச் சீட்டு மூலமான மருந்துக்கு நீங்கள் பணம் கொடுப்பதற்கு உதவமுடியும்:

ஆரோக்கியம் மற்றும் நீண்ட காலப் பராமரிப்புக்கான ஒன்ராறியோ அமைச்சு (Ontario Ministry of Health and Long-Term Care) நீங்கள் மருந்துச் சீட்டு மருந்துகளுக்கு உரிய பணத்தை செலுத்துவதற்கு பின்வரும் செயல் திட்டங்களின் ஊடாக உதவ முடியும்:

  • ஒன்ராறியோ மருந்து நலன் திட்டம் (The Ontario Drug Benefit Program / ODB) (1). இத்திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சமூகசேவை உதவிபெறுவோர் மற்றும் நீண்டகாலப் பராமரிப்பு நோயாளர் ஆகியோரின் சில மருந்துச் சீட்டு மருந்துகளுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.
  • திரில்லியம் மருந்து திட்டம் (Trillium Drug Program). (2) இத்திட்டத்தின் கீழ் தமது குடும்ப வருமானத்துடன் ஒப்பிடுகையில் கூடுதலான மருந்துச் செலவுகளை எதிர்நோக்கும் மக்களின் மருந்துச் சீட்டு விலைக்குப் பணம் கொடுப்பதற்கு உதவி வழங்கப்படுகிறது.
  • விசேட மருந்துகள் திட்டம் (Special Drugs Program). (3) இத்திட்டத்தின் கீழ் ஏச்ஐவி கிருமித் தொற்றுநிலை, ஸ்கிசோபிறினியா மனநோய் மற்றும் சில நிலைமைகளில் நீங்கள் உபயோகிக்கும் மருந்துக்குப் பணம் கொடுக்கப்படுகிறது.
  • இடைக்கால சமஷ்டி அரசு ஆரோக்கிய திட்டம் (Interim Federal Health Program / IFH) (4). அகதிநிலை கோரி நிற்போர் தமது மருந்துச்சீட்டு மருந்துகளுக்குப் பணம் கொடுக்க இத்திட்டம் உதவுகிறது.

தனியார் காப்புறுதித் தெரிவுகள்

மருந்துச் சீட்டு மருந்துகளுக்குரிய செலவுக்குப் பணம் கட்ட உதவும், தனியார் ஆரோக்கிய காப்புறுதியை வழங்குகின்ற தனியார் காப்புறுதி வர்த்தக நிறுவனங்களில் பின்வருவனவும் அடங்கும்:

வேறு தனியார் காப்புறுதித் தெரிவுகள் செய்வதற்கு நீங்கள் வாழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்கான கனேடிய சங்கத்தின் (Canadian Life and Health Insurance Association / CLHIA) (5) இணையத்தளத்தில் உலாவி பார்க்கலாம் அல்லது மஞ்சள் பக்கங்கள் (Yellow Pages) புத்தகத்தில் தேடலாம்.

மேலதிக தகவலுக்கு:

(1) Ontario Drug Benefit (ODB) information available at:
http://findlink.at/ODB

(2) Read more about the Trillium Drug Program:
http://findlink.at/trillium

(3) Ontario Ministry of Health and Long-Term Care:
http://findlink.at/specdrug

(4) Interim Federal Health Program (IFH) information available at:
http://findlink.at/IFH

(5) Canadian Life and Health Insurance Association:
http://findlink.at/membership