InMyLanguage.Org will be taken offline on March 24, 2017. Until that time, you can download and save the documents that you would like to keep. After that date, please see Settlement.Org’s for translated information.

InMyLanguage.Org / Dans Ma Langue sera mis hors ligne le 24 mars 2017. Jusqu'à cette date, vous pourrez télécharger et sauvegarder les documents que vous souhaitez conserver. Suite à cette date, des documents du site figureront sur Etablissement.Org.

கல்வி

ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு வகைப் பாடசாலைத் தொகுதிகள், வயது வந்தோருக்குரிய கல்விக்கான வாய்ப்புக்கள் மற்றும் ஆங்கிலத்தை ஓர் இரண்டாம் மொழியாகக் கற்றல் ஆகியன பற்றிய தகவலினை இங்கு காணுங்கள்.

பொதுவான தகவல்

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

பாடசாலை சபை எவ்வாறு அமைக்கப்படுகிறது, எவ்வாறு இயங்குகிறது?

ஒன்ராறியோவில் ஆரம்பக் கல்வி மற்றும் மேநிலைக் கல்விக்கு கல்வி அமைச்சு (1) பொறுப்பாகும்.

பொதுசன நிதியில் இயங்கும் பாடசாலைகள் மாவட்ட பாடசாலை சபைகளால் நிர்வாகம் செய்யப்படுகின்றன. நகராட்சித் தேர்தல்களின்போது இந்த சபைகளுக்காக அறங்காவலர்கள் என அழைக்கப்படும் உள்ளூர் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெற்றோர் மற்றும் பொது மக்களின் நலன்களை இந்த அறங்காவலர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

பாடசாலை சபைகள் இவற்றுக்குப் பொறுப்பாகும் :

  • ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களை நியமிப்பது, பாடசாலைகளைக் கட்டுவது மற்றும் பராமரிப்பது, பாடசாலைக்குத் தேவையானவற்றை வாங்குவது போன்ற பணிகளுக்காக மாகாணத்திலிருந்து கிடைக்கும் நிதிகளை எவ்வாறு செலவழிப்பது என முடிவு செய்தல்.
  • புதிய பாடசாலைகளை எங்கே கட்ட வேண்டும், பாடசாலைகளை மூட வேண்டுமா, அப்படியானால் எப்போது மூடலாம் என முடிவு செய்தல்.
  • சிறப்புக் கல்வி, புதிய மாணவர்களுக்கான திட்டங்கள், பிரெஞ்சு மொழியில் பயிற்றுவித்தல் (French Immersion) போன்ற திட்டங்களை பாடசாலைகளில் வழங்குதல்.
  • உள்ளூர் கல்விக் கொள்கைகளை வகுத்தல் (உதாரணமாக, பாதுகாப்பான பாடசாலைகள், வீட்டுப் பாடங்கள்).
  • பாடசாலை சபைக்காக வருடாந்தர சமநிலை பட்ஜெட் முடிவு செய்தல்.
  • பெற்றோருக்கு உதவிக் குறிப்புகள்.
  • கல்விச் சட்டம் (Education Act) வரையறை செய்த விதிகளை பாடசாலைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல்.
  • பாடசாலை சபைக்காக ஒவ்வொரு பாடசாலையிலும் பாடசாலைக் குழு ஒன்றையும் பெற்றோர் ஈடுபாட்டுக் குழு ஒன்றையும் நிறுவுதல்.

உங்கள் பகுதிக்கான அறங்காவலர் யார் என்பதை உங்கள் பாடசாலை அலுவலகத்தில் அல்லது உள்ளூர் பாடசாலை சபையில் (2) கேட்டறியலாம்.

உங்கள் பிள்ளைக்கேற்ற பாடசாலை பற்றிய தகவல் அறிய பல்வேறு சமூக அமைப்புகள் உதவ முடியும். உங்கள் பகுதியில் கிடைக்கும் உதவி பற்றி அறிய 2-1-1 என்ற இலக்கத்தை அழைத்து, சமூக தகவல் மைய (Community Information Centre) (3) பிரதிநிதியிடம் பேசவும்.

மேலதிக தகவலுக்கு:

(1) Ministry of Education:
http://www.edu.gov.on.ca/

(2) Local School Boards:
http://findlink.at/boardlist

(3) Community Information Centre
http://www.211ontario.ca

(4) Private Elementary and Secondary Schools:
http://findlink.at/on-schools

(5) Newcomer Reception Centres for Schools:
http://findlink.at/RecepCtrs

(6) Preschool, Elementary and Secondary School:
http://findlink.at/studyingOn