InMyLanguage.Org will be taken offline on March 24, 2017. Until that time, you can download and save the documents that you would like to keep. After that date, please see Settlement.Org’s for translated information.

InMyLanguage.Org / Dans Ma Langue sera mis hors ligne le 24 mars 2017. Jusqu'à cette date, vous pourrez télécharger et sauvegarder les documents que vous souhaitez conserver. Suite à cette date, des documents du site figureront sur Etablissement.Org.

அன்றாட வாழ்க்கை

ஒன்ராறியோவில் வசிப்பது பற்றி நீங்கள் அறிந்து பரிச்சயம் அடைவதற்கு இந்தப் பிரிவு உதவும் என்பதுடன், இங்கு வந்து சேரும் பொழுது எதனை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்பது பற்றியும் ஓரளவு தகவலினை உங்களுக்கு இது வழங்கும்.

ஆரோக்கிய காப்புறுதி

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

நான் ஒன்ராறியோவில் இருக்காத பொழுது ஓஹிப் ஆரோக்கிய காப்புறுதித் திட்டம் எனக்குக் காப்பு வழங்குகிறதா?

ஓஹிப் ஆரோக்கிய காப்புறுதித் திட்டம், நீங்கள் ஒன்ராறியோவுக்கு வெளியே இருக்கின்ற போதிலும் கனடாவுக்கு உள்ளே இருப்பீர்கள் ஆயின் உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு கிரயங்களில் (costs) பெரும்பாலானவற்றுக்குப் பணம் வழங்குகிறது.

கனடாவுக்கு வெளியே நீங்கள் பிரயாணம் செய்யும் பொழுது ஓஹிப் திட்டம் சில சேவைகளுக்கு மட்டுமே பணம் வழங்குகிறது.

நீங்கள் ஒன்ராறியோவில் இருக்காத பொழுதிலும் உங்கள் ஓஹிப் அட்டையை உங்களுடன் வைத்திருங்கள். ஓஹிப் திட்டத்தின் மூலம் உங்களுக்கான கிரயங்கள் வழங்கப்படுவதற்காக நீங்கள் இந்த அட்டையினை வைத்தியரிடம் காட்ட வேண்டும்.

நான் கனடாவில் பிரயாணம் செய்யும் பொழுது ஓஹிப் திட்டம் எனக்கு காப்பு வழங்குகிறதா?

கனடாவின் மற்றைய பகுதிகளில் பெரும்பாலானவற்றில் நீங்கள் இருக்கும் பொழுதும் அடிப்படையான ஆரோக்கிய பராமரிப்பு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

நீங்கள் கியூபெக்கில் இருக்கும் பொழுது சேவைகளுக்கு பணம் செலுத்த வேண்டி இருக்கலாம். பின்பு நீங்கள் ஒன்ராறியோவுக்குத் திரும்பி வந்ததும் உங்கள் பற்றுச் சீட்டினை உள்ளூரில் உள்ள ஆரோக்கிய அமைச்சுக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கலாம். உங்களுக்கு உரிய தகைமை இருக்குமானால், குறிப்பிட்ட அந்தச் சேவைக்காக நீங்கள் செலுத்திய பணத்தில் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ நீங்கள் பெறக்கூடும். இருந்த போதிலும், அந்தச் சேவைக்கு ஒன்ராறியோவில் செலவாகும் தொகைக்குச் சமமாக உள்ள ஒரு தொகையினை மட்டுமே அவர்கள் உங்களுக்குத் திருப்பி அனுப்புவார்கள்.

நான் கனடாவுக்கு வெளியே இருக்கும் பொழுது ஓஹிப் திட்டம் எனக்குக் காப்பு வழங்குமா?

நீங்கள் கனடாவுக்கு வெளியே பிரயாணம் செய்யும் பொழுது உங்கள் ஓஹிப் ஆரோக்கிய அட்டையினை உபயோகித்து அவசரகால ஆரோக்கிய சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும். அவசரகால சேவைகள் என்பவை உங்களுக்கு அத்தருணத்தில் உடனடியாகத் தேவைப்படும் சிகிச்சைகள் ஆகும். இவற்றில் பின் வருவன அடங்கும்:

  • தீவிரமானவையும் எதிர்பாராதவையுமான நிலைமைகள்
  • நீங்கள் வெளியே சென்றிருக்கும் வேளையில் ஏற்படும் காயங்கள்
  • ஒன்ராறியோவுக்கு வெளியே நீங்கள் இருக்கும் பொழுது ஏற்படும் ஒரு சுகவீனம்.

இவ்வாறான சேவைகளுக்கு முன்னேற்பாடாக நிறுவப்பட்ட ஒரு தொகையினையே ஓஹிப் திட்டம் வழங்கும்.

ஒன்ராறியோவுக்கு வெளியே நீங்கள் இருக்கும் பொழுது ஓஹிப் திட்டம் காப்பு வழங்காத ஆரோக்கிய சேவைகள் பல உண்டு. உதாரணமாக, நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யும் பொழுது ஓஹிப் திட்டம் பணம் தரமாட்டாது:

  • ஆம்புலன்ஸ் வண்டி ஒன்றினை உபயோகிக்கிறீர்கள்
  • ஒன்ராறியோவில் திட்டமிட்டு நீங்கள் பெறக்கூடிய மருத்துவ சேவைகளை வெளியே பெறுகிறீர்கள்

கனடாவுக்கு வெளியே நான் பயணம் செய்யும் பொழுது எனது ஆரோக்கிய பராமரிப்புக்கு நான் எப்படிப் பணம் செலுத்துவேன் ?

நீங்கள் பிரயாணம் செய்யும் பொழுது தனியார் முறையிலான ஆரோக்கிய காப்புறுதியை வாங்குவதற்கு முடியும். ஓஹிப் திட்டத்தின் மூலம் காப்பு வழங்கப்படாத சேவைகளுக்கெனப் பணம் கட்டுவதற்கு இது உதவ முடிகிறது.

கனடாவுக்கு வெளியே இருக்கும் பொழுது எவ்வகையான காப்புறுதியை நீங்கள் பெறலாம் என்பது பற்றிய தகவல், ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துக்கான கனேடிய காப்புறுதிச் சங்கத்திடம் (Canadian Life and Health Insurance Association /CLHIA) (1) உண்டு. CLHIA காப்புறுதிச் சங்கத்தினை பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் அழையுங்கள் :

கட்டணமற்ற தொ. பே. இலக்கம் : 1-800-268-8099 (ஆங்கிலம்) அல்லது

1-800-361-8070 (பிரெஞ்சு)

ரொறொன்ரோ: 416-777-2221

ஓஹிப் திட்டத்தின் காப்புக்கு உட்பட்ட நிலையில் நான் எவ்வளவு காலம் வெளியே தங்கி இருக்க முடியும்?

12 – மாத காலத்தில் 212 நாட்களுக்கு நீங்கள் கனடாவுக்கு வெளியே இருந்து கொள்வீர்கள் என்றாலும் ஓஹிப் திட்டம் தொடர்ந்து உங்களுக்குப் காப்பு வழங்குகிறது.

நீங்கள் 212 நாட்களிலும் கூடுதலாக வெளியே இருக்கப் போகிறீர்கள் என்றால் தொடர்ச்சியான ஓஹிப் திட்டத் தகைமை பெறுவதற்கென விண்ணப்பம் செய்ய முடியும். இந்த நாட்டுக்கு வெளியே 212 நாட்களுக்கும் கூடுதலாக நீங்கள் இருக்கப் போகிறீர்கள் என்றாலும் உங்களுடைய ஓஹிப் ஆரோக்கிய நலன்களைப் பேணிக் கொள்ள விரும்புகிறீர்கள் என்பது இதன் அர்த்தமாகும். பின்வரும் காரணங்களால் நீங்கள் இந்த நாட்டுக்கு வெளியே இருக்கிறீர்கள் என்றால் ஓஹிப் ஆரோக்கிய திட்டம் உங்களுக்கு கூடிய காலத்துக்கு காப்பு வழங்கலாம்:

  • கல்வி கற்றல்;
  • தொழில் செய்தல்;
  • உல்லாசப் பயணம் மேற்கொள்ளல்;
  • சர்வதேச அபிவிருத்திப் பணி புரிதல்.

இது சம்பந்தமான மிகச் சமீபத்திய காலத் தகவலினை பெறுவதற்கு, ஆரோக்கிய அமைச்சின் தகவல் தொலைபேசி இணைப்பினை அழையுங்கள் :

கட்டணமற்ற தொ. பே. இலக்கம்: 1-866-532-3161 (ஒன்ராறியோவில் மட்டும் கட்டணம் இல்லை)

ரொறொன்ரோ: 416-326-1234

செவிப் புலன் குறைந்தோருக்கு (TTY): 1-800-387-5559

மேலதிக தகவலுக்கு:

(1) Canadian Life and Health Insurance Association:
http://findlink.at/clhia

(2) Travelling Outside Canada - Ontario Ministry of Health and Long-Term Care:
http://findlink.at/ohiptravel

(3) Health Coverage Outside of Ontario - Ministry of Health and Long-Term Care:
http://findlink.at/OhipoutOnt

(4) Longer Absences from Ontario - Ministry of Health and Long-Term Care:
http://findlink.at/longabsens