InMyLanguage.Org will be taken offline on March 24, 2017. Until that time, you can download and save the documents that you would like to keep. After that date, please see Settlement.Org’s for translated information.

InMyLanguage.Org / Dans Ma Langue sera mis hors ligne le 24 mars 2017. Jusqu'à cette date, vous pourrez télécharger et sauvegarder les documents que vous souhaitez conserver. Suite à cette date, des documents du site figureront sur Etablissement.Org.

கல்வி

ஒன்ராறியோவில் உள்ள பல்வேறு வகைப் பாடசாலைத் தொகுதிகள், வயது வந்தோருக்குரிய கல்விக்கான வாய்ப்புக்கள் மற்றும் ஆங்கிலத்தை ஓர் இரண்டாம் மொழியாகக் கற்றல் ஆகியன பற்றிய தகவலினை இங்கு காணுங்கள்.

ஒன்ராறியோவில் பாடசாலைத் தொகுதிகள்

  • v
  • அச்சிடுங்கள்
  • பீடிஎஃப் பிரதியாக்கம் (PDF)
  • எனக்கு மிகவும் பிடித்தவை தொகுதியில் சேர்த்து விடுங்கள்
 

ஒன்ராறியோவில் உள்ள வெவ்வேறு வகையான பாடசாலைத் தொகுதிகள் யாவை?

ஒன்ராறியோவில் பொதுசன – நிதியுதவி பெறும் பாடசாலைகள் (publicly-funded schools) மற்றும் தனியார் பாடசாலைகள் (private schools) உள்ளன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடாசாலை ஏற்பாடு செய்ய முடியும் அல்லது அவர்களுக்கு வீட்டிலேயே கல்வி புகட்டவும் முடியும்.

பொதுசன – நிதியுதவி பெறும் பாடசாலைகள்

அரச நிதிஉதவி பெறும் 4 பொதுசன பாடசாலைத் தொகுதிகளை ஒன்ராறியோ கொண்டுள்ளது:

  • ஆங்கில பொதுசன வகை
  • ஆங்கில கத்தோலிக்க வகை
  • பிரஞ்சு –மொழி பொதுசன வகை
  • பிரஞ்சு -மொழி கத்தோலிக்க வகை

பொதுசன நிதிஉதவி பெறும் பாடசாலைகள் ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை பாடசாலைகளை உள்ளடக்கும். எல்லா பொதுசன பாடசாலைகளும் பிரதேச கல்விச் சபைகளினால் (district school boards) (1) நிர்வகிக்கப்படுகின்றன.

ஆங்கில பொதுசன பாடசாலைகள் (ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை வகை) மற்றும் ஆங்கில கத்தோலிக்க இரண்டாம்நிலைப் பாடசாலைகள் ஆகியன எல்லா மாணவர்களுக்கும் உரியவை.

உரோமன் கத்தோலிக்கர்களாக ஞானஸ்நானம் செய்யப்பட்ட எல்லா மாணவர்களுக்கும், ஒன்று அல்லது இரண்டு உரோமன் கத்தோலிக்க பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளுக்கும் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலைகள் உரியனவாகும். சில ஆங்கில கத்தோலிக்க பாடசாலைச் சபைகள் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் கத்தோலிக்கர் அல்லாத மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளக் கூடும்.

பிரஞ்சு மொழிப் பாடசாலைகள் பிரஞ்சு மொழிக்கல்வியைப் பெற விரும்பும் எல்லா மாணவர்களுக்கும் உரியனவாகும்.

பொதுசன பாடசாலைகள் பற்றிய மேலதிக தகவலுக்கு உங்கள் உள்ளூர் பாடசாலைச் சபையுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பகுதியிலுள்ள பாடசாலைச் சபையினது தொலைபேசி இலக்கத்தை அறிய நீங்கள் கல்வி அமைச்சினையும் (Ministry of Education) (2) தொடர்பு கொள்ள முடியும்:

கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் Toll-free: 1-800-387-5514

ரொறோன்ரோ Toronto: 416-325-2929

தனியார் பாடசாலைகள்

தனியார் பாடசாலைகள் (Private schools) சுயாதீன பாடசாலைகள் எனவும் அழைக்கப்படுகின்றன. அவை ஆரம்ப மற்றும் இரண்டாம்நிலை கல்வியை வழங்குகின்றன. தனியார் பாடசாலைகள் அரச நிதிஉதவியைப் பெறுவது இல்லை. இந்தப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கு மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் பாடசாலைகள் சமயம், கலாச்சாரம், மொழி என்பவற்றில் அல்லது குறிப்பிட்ட கற்பித்தல் அணுகுமுறைகளில் கவனம் செலுத்தக் கூடும்.

கல்வி அமைச்சிடமிருந்து (Ministry of Education) ஒன்ராறியோவிலுள்ள தனியார் பாடசாலைகளினது பட்டியல் ஒன்று பெறமுடியும். மேலதிக தகவலைப் பெற பின்வரும் இலக்கத்தில் கல்வி அமைச்சினை (Ministry of Education) அழையுங்கள்:

கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் (Toll-free): 1-800-387-5514

ரொறோன்ரோ (Toronto): 416-325-2929

வீட்டுப்பாடசாலை (Home Schooling)

வீட்டுப்பாடசலை என்பது உங்கள் பிள்ளைக்கு வீட்டில் கல்வி புகட்டுவது என்பதாகும். வீட்டுப்பாடசாலை பற்றியும் உங்களுக்கு உதவக்கூடிய மூலவளங்கள் பற்றியும் மேலதிக தகவலுக்கு கல்வி புகட்டும் பெற்றோருக்கான ஒன்ராறியோ சம்மேளனத்தை / Ontario Federation of Teaching Parents (OFTP) (3) பின்வரும் இலக்கங்களில் தொடர்பு கொள்ளுங்கள்:

கட்டணமற்ற தொலைபேசி இலக்கம் (Toll-free): 1-800-704-0448

ரொறோன்ரோ (Toronto): 416-410-5218

உங்கள் பிள்ளைகளுக்கான பாடசாலை பற்றிய தகவலைக் கண்டறிய உங்களுக்குப் பல சமூக முகவர் நிலையங்கள் உதவ முடியும். உங்களுக்கு அருகே உள்ள ஒரு சமூக தகவல் நிலையத்திற்கு (Community Information Centre) (4) செல்லுங்கள் அல்லது ஒரு பிரதிநிதியுடன் பேசுவதற்கு 2-1-1 என்ற இலக்கத்தை உங்கள் தொலைபேசியிலிருந்து அழையுங்கள்.

மேலதிக தகவலுக்கு:

(1) District School Boards:
http://findlink.at/boardlist

(2) Ministry of Education:
http://findlink.at/education

(3) Ontario Federation of Teaching Parents (OFTP):
http://findlink.at/OFTP

(4) Community Information Centres (CICs):
http://www.211Ontario.ca