பதிப்புரிமையும் தகவல்களைப் பயன்படுத்துவதும்

இந்த இணயத்தளத்தில்  உள்ளடக்கப்பட்டுள்ள  எல்லா (materials) தகவல்தொகுப்புகளும் (copyright)பதிப்புரிமை, (trademark)வர்த்தகக்குறியீடு, ஏனைய சட்டங்கள், அனைத்தும் இதுவரை வேறு வகையில் குறிப்பிடப்படாத வரை "OCASI" என  வழங்கப்படும்(Ontario Council of Agencies Serving Immigrants) குடிவரவாளர்களுக்குச் சேவையாற்றும்   ஒன்ராரியோ கவுன்ஸிலின் உடைமையாகும். அனுமதிக்கப்படாத  நிலையில் இத்தகைய தகவல் தொகுப்புகளைப் பயன்படுத்துவது, பதிப்புரிமை, வர்த்தகக்குறியீடு, ஏனைய சட்டங்ளைத் துஷ்பிரயோகம்செய்வதாக அமையும்.   பெரும்பாலான தகவல்தொகுப்புகள் ,பதிப்புரிமைக்கான விதிகள், வேறு வகையில் குறிப்பிடப்பட்டாலன்றி,( creative commons) பதிப்புரிமைக்கான சான்றிதழ் வழ Creative Commons Licence Creative Commons Licence Attribution-Non-commercial-Share Alike 3.0" என்ற  தலைப்பின் கீழ்  பதிப்புரிமைசெய்யப்பட்டுள்ளது.

இந்த பதிப்புரிமை(Copyright) கீழ்வருவனவற்றை உங்களுக்கு வழங்குகிறது: 

(To Share) பகிர்ந்துகொள்ள  —  பிரதிசெய்ய, வினியோகிக்க, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வேலையை அனுப்பிவைக்க

(To Remix) மறுகலவைசெய்ய
— வேலையை ஒழங்குபடுத்தி தகுதியானதாக மாற்றுவதற்கு

கீழ்வரும் நிபந்தனைகளிள் கீழ்:

(Attribution) ஒப்படைத்தல் — படைப்பாளர் அல்லது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர் குறிப்பிடும் விதத்தில், பணிகளை நீங்கள் ஒப்படைக்கவேண்டும்.  (ஆனால், அவர்கள் உங்களை உறுதிப்படுத்த ஆலோசனை செய்யப்பட்ட விதம் அல்லது வேலையை நீங்கள் பயன்படுத்தும் விதத்தில் அல்ல) எந்த வகையில் ஒப்படைத்தல் அவசியம் என்பதை ஒவ்வொரு ஆவணமும் விவரிக்கும்.

(Non-commercial) வர்த்தக நோக்கமற்றது
— வர்த்தக நோக்கங்களுக்காக இதனை நீங்கள்  பயன்படுத்த முடியாது.

(Share Alike) ஒரே மாதிரியாகப் பகிர்ந்துகொள்ள
 — நீங்கள் மாற்றம்செய்தல், உருமாற்றம் மேற்கொள்ளல், அல்லது இந்த வேலையை நிர்மாணித்தல்போன்றவைகள், அதே அனுமதிப்பத்திரம், அதேபோன்ற அல்லது  அதற்கு  ஒப்பான ஓர் அனுமதிப் பத்திரத்தின் கீழ் மாத்திரம் தான் அந்த வேலையின் பெறுபேற்றை நீங்கள்  வினியோகம் செய்யலாம்.
பதிப்புரிமை மேலே உள்ளவற்றை விட வித்தியாசமாக( உதாரணமாக, partner content போன்றவை)  அமைந்தால், பதிப்புரிமை செய்யப்பட்ட  உள்ளடக்கத்துக்கு பக்கத்தில்  அது கண்டிப்பாகக் குறிப்பிடப்படல்வேண்டும்.

கீழ்வரும் புரிந்துணர்வுக்குக்கீழ்:

(Waiver)விலக்களிக்கப்பட்டது—  பதிப்புரிமையாளரின்  அனுமதிபெறப்பட்டு மேலே உள்ள  ஏதாவது  நிபந்தனைகளிலிருந்து விலக்களிக்கப்படலாம்.
(Public Domain)பொதுவான தளம்— நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒருவேலை அல்லது அதன் ஏதாவது மூலகங்களில் ஒன்று பொதுவான தளம்(Public Domain)  இருந்தால், அந்த  நிலைப்பாடு  அனுமதிப்பத்திரத்தை எந்தவகையிலும் பாதிக்கமாட்டாது.
(Other Rights) ஏனைய உரிமைகள் —கீழ்வரும் உரிமைகள் அனுமதிப் பத்திரத்தினால் எந்த வகையிலும் பாதிக்கமாட்டாது:

  • நியாயமான உங்கள் நடத்தை அல்லது உரிமையை, அல்லது ஏனைய செல்லுபடியான விதிவிலக்கான பதிப்புரிமையையும் வரையறைகளையும்  (fair use rights)நியாயமாகப் பயன்படுத்தல்;
  • நூலாசிரியரின் (moral rights)தார்மீக உரிமைகள்;
  • வேலையில் அல்லது வேலையைப்  பயன்படுத்துவதில் (publicity) பகிரங்கப்படுத்தல், அல்லது அந்தரங்க உரிமைகள் போன்றவற்றில்   ஏனையவர்களுக்கு இருக்க முடியுமான உரிமைகள்.

Notice அறிவித்தல்

எவ்வகையான மீள்பயன்பாடு அல்லது பங்கீடு செய்தல், போன்றவற்றில்  இந்தவேலையின் அனுமதிப்பத்திர விதிமுறைகளைப் பொறுத்தமட்டில், நீங்கள் ஏனையவர்களுக்கு கண்டிப்பாகத் தெளிவுபடுத்த வேண்டும்.  இந்த வலைப்பக்கத்தின்  இணைப்புடன் தொடர்புகொள்வதே அதற்கு மிகச் சிறந்த வழியாகும்.

Volume Copy தொகுப்பின் பிரதி

ஏற்கனவே OCASI யின் எழுத்து மூலமான அனுமதி இன்றி, 20 க்குமேற்பட்ட கட்டுரைகளை InMyLanguage.org ல் இருந்து பிரதிபண்ணுவது, இணயத்தளத்தின் ஒரு பகுதியாக அதனை மீள்தொகுப்பது அல்லது  ஆவணங்களை அச்சிடுவது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.