அந்தரங்கம் பேணும் கொள்கை

நீங்கள் InMyLanguage.org க்குச் செல்லும்போது உங்கள் அந்தரங்கம் எமக்கு மிக முக்கியமானது என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது   முக்கியமானதாகும்.  "OCASI," என இதன் பிறகு குறிப்பிடப்படும் (‘Ontario Council of Agencies Serving Immigrants') குடிவரவாளர்களுக்குச் சேவையாற்றும்   ஒன்ராரியோ கவுன்ஸிலின் அந்தரங்கம் தொடர்பான  கொள்கைகளை இந்தப் பக்கம்  விரிவாகத் விளக்குகின்றது.
 

(General Statement) பொது அறிக்கை

  அதன்  பாவனையாளர்கள் சுயவிருப்பின் அடிப்படையில்   வெளியிட்டாலன்றி, அவர்களைப் பற்றிய  அந்தரங்கத் தகவல்களையோ  தனிப்பட்டவகையில்  அவர்களை இனங்காணக் கூடிய தகவல்களையோ OCASI சேகரிப்பதில்லை.   பாவனையாளர்  எமக்கு தகவல்களைத் வழங்கும் போது (உதாரணமாக மின்னஞ்சல் விலாசம் போன்றவை ) மிகவும் அந்தரங்கமாகப்  பேணப்படும். எமக்கு வழங்கப்படும்  தகவல்கள் (InMyLanguage.org க்கு நிதி வழங்கும் அரச முகவர் நிலையங்கள் உட்பட) எந்த ஒரு வெளியார் நிறுவனம் அல்லது  இணயத்தளத்துடனும்  பகிர்ந்து கொள்ளப்படமாட்டாது.

 சிறப்பு உதாரணங்கள்

 “எனக்கெனப் பயன்படுத்துநருக்கு ஏற்றதாக்கியவை” பிரிவு

இணயத்தளத்தின் இப்பிரிவு, சில மூலகங்களை தளத்தில் நீங்கள் பின் தொடர்ந்து செல்வதற்கும்   உங்கள் தளத்தின் நிலைகளை இயல்புபடுத்தவும் உங்களுக்கு வாய்ப்பை  வழங்குகிறது. நீங்கள் ஒரு பாவனைப்  பெயரை உருவாக்கினால், அது உங்களை இணயத்தளத்துக்கு அறிமுகங் செய்து, வெவ்வேறு பிரிவுகளை உங்களுக்குத் தனிப்பயனாக்கிக் கொள்ளவும்  உங்கள் தளத்தின் பாவனைக்காக சில மூலகங்களைப் பின் தொடர்வதற்காகவும் இணயத்தளத்தின் இப்பிரிவு உங்களுக்கு உதவும்.  நீங்கள், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப்  பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கும் விவரங்கள் தவிர, ஏனைய உங்கள் தகவல்களையும்  நாம் இரகசியமாகப் பேணுவோம்.

கேள்வி கேட்டலும் (Feedback)கருத்துக்களை வழங்கலும்  

Contact Us பக்கத்தினூடாகவும் இத்தளத்தின் குறிப்புப் பகுதிகளினூடாகவும் உங்கள்  ஆலோசனைகளையும் விமரிசனங்களையும் InMyLanguage.org குழுவினருக்கு வழங்க நீங்கள் தூண்டப்படுகின்றீர்கள். நீங்கள்  விரும்பாவிட்டால் உங்களைப்பற்றிய தகவல்களை நீங்கள் வழங்குவது அவசியமில்லை.  (feedback) கருத்துக்களைத்தெரிவிக்கும் போது நீங்கள் வழங்கும் தகவல்கள் மாத்திரம்  எங்களுக்கு  அனுப்பி வைக்கப்படும்.

(Notifications)அறிவித்தல்கள்

மின்னஞ்சல் (alerts)  மூலமாக விழிப்பு  அறிவுறுத்தல்கள் உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் தெரிவு செய்தால், மின் அஞ்சல் முகவரியை மாத்திரம்  நீங்கள் வழங்குவது போதுமானது. தகவல்களை உங்களுக்கு அனுப்பி வைக்க, அம்மின்னஞ்சல் முகவரி பயன்படுத்தப்படும். மேற்படி உங்கள் விலாசம் வேறு யாருக்கும் தெரியமாட்டாது. வேறு  எந்தப் பாவனையாளர்  அல்லது  நிறுவனம், இணயத்தளம்  அல்லது அரச முகவர் நிலையங்கள் எதுவும் அதனைப் பாவிக்க முடியாது.

"Cookies"–Statistics கணணியின் நினைவில் இருப்பவை – புள்ளிவிவரவியல்

(cookie) எனப்படுவது சிறியதொரு உரைக்கோவையாகும். இதற்கு சிறப்பான அடையாள இலக்கம் உள்ளது. இவ்விலக்கம் இணயத்தளத்திலிருந்து உங்கள் கணனியின்(hard drive) வன்செலுத்திக்கு இடமாற்றப்படும். இந்த இணையத்தளத்தினால் உங்கள் தளத்தினுள் பிரவேசிக்கும் வெளியாட்கள் இனங்காணப்படுவர். இதன் மூலம் இணயத்தளத்தில் பாவனையாரின் செயற்பாடுகள் கண்காணிக்கப்படும்.  உங்களது உண்மையான பெயர், விலாசம் போன்ற தனிப்பட்ட ஆளடையாளத் தகவல் களை அறிந்து கொள்ள (cookie)   எந்த ஒரு இணயத்தளத்தையும் அனுமதிக்காது.

  எத்தனை நபர்கள் InMyLanguage.org இணயத்தளத்திற்கு பிரவேசித்தார்கள் அவர்கள் தளத்தின் எங்கெங்கு உலாவுகின்றார்கள்  என்பவற்றை  மாத்திரம்  அறிந்துகொள்ளவே OCASI , (cookie) யைப் பயன்படுத்துகின்றது.  தளத்தில் நீங்கள்  இருக்கும்போது உங்கள் தனிப்பட்ட நகர்வைக் கண்காணிக்க முடியாது. தளத்தின் எந்தப் பாகங்கள் பயன்படுத்தப்படவில்லை என இனங்கண்டு அதன் மூலம் தளத்தின் தரத்தை மேம்படுத்துவதே எமது ஒரே ஆர்வமாகும்.
 

(Linked Websites)இணைந்த இணயத்தளங்கள்

InMyLanguage.org இணயத்தளத்துடன்  தமது  இணயத்தளத்தைத் தொடர்புபடுத்தும்  தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் தொடர்பான கொள்கையை OCASI மீளாய்வுசெய்வதில்லை. இந்த அந்தரங்க அறிக்கையில்  விபரிக்கப்பட்டவாறு,தகவல்களைச் சேகரிப்பது, பாவனை மற்றும் அந்தரங்கத் தகவல்களை வெளியிடுவது தொடர்பான OCASI இன் கொள்கைகள்,  மேற்குறிப்பிட்ட இணைந்த   இணயத்தளங்களின் பாவனையாளர்கள் மேற்படி இணணைந்த இணயத்தளங்கள் ஊடாக வழங்கிய  தனிப்பட்ட தகவல் வழங்கும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தாது. ஆகவே பாவனையாளர்கள் தமது தனிப்பட்ட தகவல்களை  அவற்றுக்கு வழங்க முன் அவற்றின் அந்தரங்கக் கொள்கை தொடர்பான அறிக்கைகளையும் கொள்கைகளையும் மீளாய வேண்டும்.

(Security) பாதுகாப்பு

நீங்கள் வழங்கும் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தல், மாற்றங்களைச் செய்தல், நட்டங்களை ஏற்படுத்தல் போன்றவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பை  உறுதிசெய்யும் ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளன.

(Access to Personal Information) அந்தரங்கத் தகவல்களை அணுகுதல்

OCASI யிடம்   உள்ள உங்களைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களை OCASI யிடமிருந்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ள  உங்களுக்கு உரிமை இருக்கிறது.  InMyLanguage.orgயில், உங்கள் அந்தரங்கம் தொடர்பாக ஏதாவது  கோரிக்கைகள்  அல்லது கேள்விகள்  இருப்பின், அவற்றை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.  

Privacy Officer
OCASI
110 Eglinton Avenue West, Suite 200
Toronto, Ontario M4R 1A3
privacy@ocasi.org